சஜித்தை கவிழ்க்கும் ரணிலின் சூழ்ச்சியா? கசிந்த விபரம்..!

மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸவின் எதிர்கட்சித் தலைவர் பதவியை பறித்தெடுப்பதற்கான சூழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலர் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 80 பேர் வரை சஜித் அணியில் இணைந்திருப்பதால் ஐக்கிய மக்கள் சக்தி என்பது புதிய கட்சியாகும்.

அத்துடன் அக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சி என்கிற அந்தஸ்தும் இல்லை. எனவே எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிக்கவும் முடியாது என்கிற தர்க்கத்தை குறித்த உறுப்பினர்கள் முன்வைத்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்கட்சித் தலைவர் பதவியை சஜித்திடம் இருந்து பறித்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதனை வழங்கவே குறித்த உறுப்பினர்கள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply