கொழும்பில் புலனாய்வு பிரிவினருக்கு அதிர்ச்சி கொடுத்த 20000 பேர்

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த 20 ஆயிரம் பேர் இரகசியமாக தங்கள் சொந்த மாவட்டத்திற்கு சென்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் சொந்த மாட்டங்களுக்கு சென்றவர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினால் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஊரடங்கு சட்டம் காரணமாக சிக்கியிருந்தனர். எனினும் அவர்களில் 10 ஆயிரம் பேர் பொலிஸாரின் தலையீட்டில் தங்கள் சொந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Be the first to comment

Leave a Reply