நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளன…

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்யுமாறுக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் நாளைக் காலை 10 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே, குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply