சாவகச்சேரியில் கூட்டமைப்பு நினைவேந்தலில் ஈடுபட்டது..

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்மராட்சி பிரதேச தலைமைக் காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மலர் தூபி, சுடரேற்றி சமூக இடைவெளி பேணப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

சாவகச்சேரியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோதும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டமையால் நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது

Be the first to comment

Leave a Reply