ஹக் செய்யப்பட்ட தென்னிலங்கை இணைய ஊடகங்கள்..!

தமிழ் ஈழம் சைபர் ஆர்ம் என்ற பெயரில் ஹிரு

நியுஸ் உட்பட இலங்கையின் 5 இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் அணி சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சீனாவிலுள்ள இலங்கைத் தூதரக இணையதளம் ஆகியவையும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.

மே 18 யுத்த இறுதி தினமான இன்று, பல இணையத் தளங்கலுக்குள் ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இதனை இலங்கை விமானப்படை சைபர் கட்டளை மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது.

Be the first to comment

Leave a Reply