கொரோணா தடுப்பு மருந்து கண்டுபிடித்த மகிழ்ச்சியில் லண்டன் மருத்துவர்கள்..!

கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில், லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருத்து முதற்கட்ட வெற்றியை எட்டியுள்ளது.

கடந்த ஆறுமாதங்களாக கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி இருக்கிறது. இதுவரையில் உலக அளவில் 45 லட்சம்பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 3 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சமூக இடைவெளியைப் பேணுதல், கை,கால்களை கழுவுதல், முககவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள மட்டுமே உலக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் உலக அளவில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்த நிலையில் லண்டன் ஆக்ஃஸ்போர்ட் பல்கலைகழகம் கொரோனா தடுப்பு மருந்தை முதற்கட்டமாக தயாரித்து உள்ளது. முதல் பரிசோதனையாக குரங்குகளிடம் சோதித்துப் பார்க்கப்பட்டது.

இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் வெளியிட்ட செய்தியில், தடுப்பு மருந்து கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான திறனை பெற்றிருக்கும் அறிகுறிகள் தற்போது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் நுரையீரலை மிகத் தீவிரமாக பாதிக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து குரங்குகளின் உடலில் செலுத்தபட்டதுபோது, கொரோனா வைரஸால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை இது தடுத்து நிறுத்து உள்ளது. அதே சமயம் இந்த மருந்து பெரிய அளவில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்சியில் முதற்கட்ட வெற்றி எட்டப்பட்டு இருக்கிறது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

இருந்தபோதிலும், மனிதர்களிடம் முழுமையாக சோதிக்காத வகையில் மருந்தின் தன்மையை உறுதி செய்ய முடியாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

செப்டம்பர் மாதத்துக்குள் கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மருந்துவ ஆராய்ச்சி குழு ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply