யாழ். பல்கலைக்கழகத்தில் தடைகளை மீறி நினைவேந்தல்

யாழ். பல்கலைக்கழகத்தில் தடைகளை மீறி இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த இட்சக் கணக்கான மக்களுக்கு மௌன அஞ்சலியுடன் விளக்கேற்றி நினைவு கூரப்பட்டது.

கடந்த முப்பது வருடங்களாக நீடித்த தமிழ் இன அழிப்புக்கள் 2009 இல் இந்நாளில் வகை தொகையின்றி இம்மண்ணில் பேரினவாத அரசால் நடந்தேறியது.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பதினோராம் ஆண்டு நினை வேந்தலில் இன்று.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் மே 18 நினைவேந்தலை தத்தமது வீடுகள், ஆலயங்கள் பொது இடங்களில் பாதுகாப்புடன் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

எனினும் புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பல தரப்புகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன.

இதை பொருட்படுத்தாது அனைத்து தடைகளையும் மீறி இன்ற காலை யாழ். பல்கலையில் மௌன அஞ்சலியுடன் விளக்கேற்றி நினைவு கூரப்பட்டது.

Be the first to comment

Leave a Reply