மக்களை முட்டாளாக்கும் கூட்டமைப்பின் சுத்துமாத்து No 2..

சுமந்திரன் விடுதலைப்புலிகளைப்பற்றி விமர்சனம் முன்வைத்த பின்னர் அதில் இருந்து விடுபடுவதற்காக சுமந்திரன் சுயமாக கடிதம் எழுதி சம்பந்தன் உட்பட தனது ஆதரவாளர்களிற்கு அறிக்கைகளை அனுப்பி அதனை பத்திரிகைகள் மற்றும் முகநுால் பக்கங்களில் வெளியிடுவது வழமையாக உள்ளது சம்பந்தனின் அறிக்கை வெளியான பின்னர் தற்போது சுமந்திரனின் கைக்கூலி சேர்.. சேர்.. என வரிக்கு வரி அறிக்கை விட்டுள்ளார் சுகிர்தன்

அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில்… 

கடந்த 10 வருடங்களாக அவர் ஒரே நிலைப்பாட்டலேயே உள்ளார் அதாவது நான் வன்முறைப்போராட்டத்தை விரும்பவில்லை. 


ஆனால் நான் தமிழீழ விடுதலை போரட்ட தியாகத்தை மதிக்கிறேன் அவர்களை போல எனி எவருமே இப்படியான தியாகத்தை செய்யமாட்டார்கள் என பல மேடைகளில் கூறியுள்ளார் இதனால் தான் நான் உட்பட பலர் அவரை ஆதரிக்கின்றோம். ஆனால் சுமந்திரன் சேரின்

இந்த நிலைப்பாட்டை தீவிர உணர்வாளர்கள் எதிர்த்தார்கள்

சில அரசியல் வாதிகள் அரசியல் தேவைகளற்கா எதிர்த்தார்கள் எதிர்பவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். 

ஆரம்பத்திலும் சரி இப்பவும் சரி எனது ஆதரவளர்கள் சிலர் , நண்பர்கள் சிலர் என்னுடன் முரண்பட்டார்கள், அரசியல் ரீதியில் இப்பவும் என்னுடன் முரண்படுகிறார்கள் அவர்களது உணர்வுகளையும் மதிக்கிறேன். 

ஆனால் எனது கேள்வி கூட்டமைப்பின் சில பெரிவர்கள் அரசியலில் முதிர்வானவர்கள் சுமந்திரன் சேரின் நிலைப்பாடு தொடர்பாக பொங்கி எழுந்துள்ளார்கள் அவர்களை கேட்கிறேன் இதுவரை ஏன் நீங்கள் பொங்கி எழவில்லை கோமாவிலா இருந்தீர்கள் அல்லது தேர்தல் காலத்தில் இந்த கருத்தை கூறயதால் பயப்படுகிறீர்களா?

கோமாவில் இருந்தால் பறவாயில்லை ஆனால் தேர்தல் நேரத்தில் கூறியதால் தான் நீங்கள் பொங்கினால் நீங்கள் தான் எங்கள் மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்கள். 

மக்களின் உணர்வுகளுடன் அரசியல் செய்பவர்கள் ஏனைய கட்சிகள் கூறுவது போன்று விடுதலைப்போராட்டத்தின் தியாகத்தையும் மக்களின் உணர்வுகளையும் வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள். 

பொங்கிய அனைவரையும் பார்த்து ஒரே ஒரு கேள்வி 2011 தமிழ் தேசிய கூட்டமைப்பில் புளட் அமைப்பை எந்த அடிப்படையில் சேர்த்தீர்கள்? தேசிய தலைவர் கூறிவிட்டா சென்றார் சேர்க்கும்படி? 

அல்லது அவர்கள் எங்கள் போராட்டத்திற்கு ஒரு சிறு துரும்பு உதவி செய்தார்களா? இல்லை முழுமையாக எமது போராட்டத்தையும் எமது தலைவரையும் அழிக்கும்வரை அரசாங்கத்துடன் இனைந்து செயற்பட்டவர்கள் அவ்வாறான கட்சியை எவ்வாறு நீங்கள் சேர்ப்பீர்கள்? சேர்க்கும் போது எங்கே போனது உங்கள் உணர்வுகள்?? ஏன் அப்பொழுது எவருமே பொங்கவில்லை?? 

ஆனால் சுமந்திரன் சேரின் கருத்தை எதிர்க்கும் உணர்வாளர்கள் புளட்டை சேர்த்தது பிழை என்று இப்பவும் கூறுகிறார்கள் அதே போல தமிழ் தேசிய மக்கள் முண்ணனி தொடர்சியாக பிழை என கூறி வருபவர்கள் ஆகவே அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். 

ஆனால் எங்கள் பெரியவர்கள் பலர் வாக்குகாக மக்களை ஏமாற்றுகின்றீர்களா? நாடகமாடுகிறீர்களா? அரசியலில் தமிழர்கள் தெளிவானவர்கள் நீங்கள் மக்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.

இதற்கு மக்கள் கொடுத்த பதில்கள்..

எனது சிந்தனை எப்பவுமே நாங்கள் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக யதார்த்தமான பதையில் எங்கள் மக்களின் விடிவுக்காக பயணிக்க வேண்டும் என்பதே அதனால் தான் என்போன்ற பலர் அமைதியகவும் பொறுமையாகவும் பயணிக்கின்றோம்.

ச.சுகிர்தன்

முன்னாள் மகாணசபை உறுப்பினர்.

இலங்கை தமிழரசு கட்சி.

Be the first to comment

Leave a Reply