இலங்கையை கடக்க இருக்கும் அம்பன் தொடர்பான விபரம் …!

அம்பன் சூறாவளியின் நகர்வு தொடர்பான விபரங்கள் கிடைத்துள்ளன.

திகதி / நேரம் (SLST) (HRS)
அமைவிடம் (LAT / LON)
திருகோணமலையில் இருந்து KM

2020 – 05 – 17 (1130)
11.7 N / 85.9E
618

2020 – 05 – 17 (1730)
12.3 N / 85.8E
649

2020 – 05 – 17 (2330)
13.1 N / 85.9E
716

2020 – 05 – 18 (0530)
13.7 N / 86.0E
770

2020 – 05 – 18 (1730)
14.8 N / 86.2E
878

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டிருந்த தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றம் பெற்றுள்ளது.
அம்பன் என அழைக்கப்படும் இந்த சூறாவளி இன்று காலை 8.30 அளவில் உருவெடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணக்கள் அறிவித்துள்ளது.
அம்பன் சூறாவளியானது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் 610 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அம்பன் சூறாவளியானது சக்திவாய்ந்ததாக மாறுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பன் சூறாவளியானது தற்போது நிலைகொண்டுள்ள பகுதியில் இருந்து, இடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் வடக்கு நோக்கி நகருமென எதிர்வு கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி அன்று அம்பன் சூறாவளி தனது திசையை மாற்றி மேற்கு வங்காள கரையை நோக்கி பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply