அக்காவை கைது செய்யும்படி பொலிசிடம் சென்ற 8 வயது சிறுவன்.. காரணம் இதுதான்..

கேரளாவில் 8 வயது சிறுவன் தன் அக்கா உட்பட 5 பெண்கள் மீது லூடோ விளையாட சேர்த்துக் கொள்ளாததால் கைது செய்யுமாறு பொலிசில் புகார் அளித்துள்ளது அதிர வைத்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் சிறுவன் உமர் நிதர்(8). 3ம் வகுப்பு படிக்கும் , ஊரடங்கு காரணத்தால் பள்ளி விடுமுறை என்பதால் தன் நண்பர்களுடன் விளையாட போக முடியாமல் இருந்துள்ளான்.

அப்பொழுது வீட்டில் தனது தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த அக்காவிடம் தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவனின் அக்கா அவனைக் கிண்டல் செய்துவிட்டு, விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாமலும் இருந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த உமர் தன் தந்தையிடம் இதனை பற்றி கூறியுள்ளார். உமரின் தந்தையும் விளையாட்டாக ‘நீ அவங்க மீது பொலிசில் புகார் கொடு’ என்று கூறியுள்ளார்.

எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டில் வழக்கு காரணமாக விசாரணைக்கு வந்த பொலிசாரிடம் சிறுவனும் தனது புகாரைக் கூறியுள்ளான்.

இதனைக் கேட்ட பொலிசார் இரவு நேரம் ஆகிவிட்டதால் நாளை நாங்கள் நேரில் வந்து பார்க்கிறோம் என கூறிவிட்டு சென்றுள்ளனர்.

சிறுவனும் இரவோடு இரவாக புகார் ஒன்றினையும் தனது கைப்பட எழுதியுள்ளார். மறுநாள் காலையில் சிறுவனிடம் விசாரிக்கு வீட்டிற்குச் சென்ற பொலிசாரிடம் உமர் தான் எழுதிய கடிதத்தினை கொடுத்துள்ளான்.

Be the first to comment

Leave a Reply