கொரோணாவை விட கொடுமையில் சிம்பாவே

ஆபிரிக்க நாடுகளில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் சிம்பாப்வே மக்கள் கொரோனாவை விட பெரிய கவலையில் உள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் சிம்பாப்வேயில் ஒரு வாளி தண்ணீருக்காக மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.கொரோனா இந்த நாட்டையும் விட்டுவைக்கவில்லை.

ஆனால் மக்களுக்கு அதைவிட பாரிய பயத்தை தந்திருக்கிறது தண்ணீர் பஞ்சம்,நாள் ஒன்றுக்கு ரேஷன் முறையில் வெறும் 40 லீட்டர் தண்ணீர்தான் அதாவது எமது ஊரில் உள்ள 2 குடம் அளவுக்குதான் தரப்படுகிறது. அதனால்தான் Chitungwiza நகரத்தில் இறந்துபோன உறவினரைக் கூட விட்டுவிட்டு பலரும் தண்ணீருக்கு ஓடி வருகிறார்கள்.கொரோனா வராமல் இருக்க தனிமனித இடைவெளி அவசியம் என்ற அரசின் அறிவுரை எல்லாம், தண்ணீர் காலியாகிவிடுமோ என்ற அச்சத்தில் காணாமல் போய் விடுகிறது. அடிகுழாய்கள் முன் வரிசை கட்டி நிற்கின்றன பிளாஸ்டிக் தண்ணீர் குடுவைகள்.

ஆபிரிக்க நாடுகளில் கொரோனா பரவலால் 3 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தாலும், பசி மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் மடிவதை விட கொரோனா பெரிய அச்சமாகத் தெரியவில்லை என்கிறார்கள் சிம்பாப்வே மக்கள்.

Be the first to comment

Leave a Reply