இலங்கையின் மறுபெயர் ஈழம்…! மறைக்கப்பட்ட உண்மை..!

பிரித்தானியாவின் புகழ்பெற்ற இணையத்தளங்களில் ஒன்றான த.கார்டியன் ஊடகம், இலங்கையின் மறுபெயராக ஈழம் என குறிப்பிட்டுள்ளது.

பண்டைய இலங்கை ஈழம் என அழைக்கப்பட்ட வரலாற்று உண்மையை, இன்றைய சிங்கள இனவாதிகள் பலர் ஏற்பதில்லை. 

ஈழம் என்பது விடுதலைப் புலிகளினால் உருவாகக்ப்பட்ட இலட்சிய நிலம் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.

ஈழம், புலம்பெயர் தமிழர்கள் என்பதற்கு விடுதலைப் புலிகள் என்ற ஒற்றை அர்த்தத்தையே இனவாதிகள் கற்பித்து வந்தனர்.

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அண்மையில் ஆங்கிலத்தில் ஈழம் தொடர்பான வரலாற்று தகவல்களை வெளிப்படையாக கூறியிருந்தது, சிங்கள இனவாதிகள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், பிரித்தானியாவின் த கார்டியன் இதழ், சுற்றுலா தொடர்பாக கேள்வி பதில் ஒன்றை வெளியிட்டிருந்தது. 

அதில் கேட்கப்பட்ட கேள்வியொன்று- ஈழம் என்பது எந்த பிரபல சுற்றுலா தீவின் மறு பெயர் என கேட்கப்பட்டிருந்தது.

Be the first to comment

Leave a Reply