யாழ் வன்னி முல்லைக்கு இனி பயணத்தடை இல்லை…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில், வாகன இலக்கம் மட்டும் பதிவு செய்யப்பட்டு மக்கள் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

எனினும் வடமாகாணத்திற்கு நுழைவதற்கு கட்டுப்பாடுகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக கட்டுப்படுத்தப்பட்டநிலையில் மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக சுகாதார பிரிவு மற்றும் பொலிஸ் அனுமதிகள் கேட்கப்பட்டிருந்தது.

எனினும் கடந்த 11ம் திகதிக்கு பின்னர் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது வாகன இலக்கங்கள் மட்டும் பதிவு செய்யப்படுகின்றது.

இது குறித்து மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறுகையில், மாவட்டங்களுக்கிடையிலான கட்டுப்பாடு தளர்வு தொடர்பாக தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என கூறியதுடன், மவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்பான விடயம் பொலிஸார், இராணுவத்தினருடைய கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடி மூலம் வடமாகாணத்திற்குள் நுழைவதற்கும் வடமாகாணத்திற்கு வெளியில் சென்றுமீண்டும் திரும்பி வருவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக பயணம் செய்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply