
நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நாளை ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், ஊரடங்கு உத்தரவை மீறும் எவரையும் கைது செய்ய நாளை நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
கொழும்பு மற்றும் கம்பாஹாவில் ஊரடங்கு உத்தரவு இன்னும் நடைமுறையில் இருப்பதால், அடுத்த வாரத்திலும் இந்த பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
Be the first to comment