மாவட்டங்களுக்கிடையிலான பொதுப்போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளது…

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்து உள்ளதாக போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு வர முயற்சிப்போருக்கான விசேட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பொது போக்குவரத்து நடைமுறைகளை வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
பொதுப்போக்குவரத்தை இரண்டு வாரங்களில் வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நிலைமைகளை கருத்திற்கொண்டு இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பொதுப் போக்குவரத்தை தளர்த்தினாலும் கூட பயணிகள் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளது.பேருந்துகள் மட்டும் புகையிரதங்களில் பயணிக்கும் விதிமுறைகள் எவ்வாறு என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து இப்போது தடுக்கப்பட்டுள்ள போதிலும் நிலைமைகளைப் பொறுத்து அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடக்கம் மாவட்டங்களைக் இடையிலான போக்குவரத்து ஆரம்பிக்க முடியும். அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பொதுப் போக்குவரத்தை முன்னெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply