யாழ்ப்பாணத்தில் மட்டும் புதிய வகையான கொரோணா பரிசோதனை முடிவுகளின் பின்னணி என்ன..?

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோணா தொற்று ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்தது.

அவ்வாறு தொற்று ஏற்பட்டவர்களில் ஒருவரை தவிர ஏனைய அனைவரும் வீடு திரும்பி உள்ளனர்.

இதே வேளை முதலில் தொற்று ஏற்பட்ட நபரே இதுவரை குணமாகாத நபராகும்.

இது தொடர்பாக ஊடகங்கள் தொடர்பு செய்து கேட்டபொழுது அந்நபருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் கால தாமதம் ஆகும் என பதிலளிக்க பட்டது.

இதேவேளை குணமாகிய 6 நபர்களுக்கு திரும்பவும் கிருமி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இறந்த கிருமியாக இருக்கலாம் என்றும் இது ஒரு புது பரிசோதனை முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் உலகளாவிய பெரும் தொற்று மூலம் யாழ்ப்பாணத்தில் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் நோக்கில் வடக்கிலிருந்து இயங்கும் வழொரு தொலைக்காட்சியும் செயல்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மற்றும் பலாலி தனிமைப்படுத்தல் மையத்திலேயே சுமார் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பியமையும்,

பொலிசாருடன் ஆளுநர் முரண்பட்டமையும்,

முதன்முதலாக தொற்று ஏற்பட்ட நபர் அதுவரை குணமாகாதமையும்,

குணமாகிய 6 பேருக்கு மீண்டும் இறந்த கிருமிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் பலத்த சந்தேகங்களையும் விசனத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மக்கள்

கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரித்தறிவதே மெய் என்று வாழ பழகிக்கொள்ள வேண்டும்..

இது தொடர்பில் பூதக்கண்ணாடி தொடர்ந்தும் தேடுகின்றது, புலப்பட்டதும் இங்கு துலங்கும்..

பூதக்கண்ணாடி

Be the first to comment

Leave a Reply