கல்முனை பொலிஸாரின் அவசர வேண்டுகோள்- வதந்தி குறித்து..

கல்முனை பொலிஸாரின் அவசர வேண்டுகோள்

பெரிய நீலாவணை பாண்டிருப்பு
கல்முனை பிரதேசங்களில் கிணறுகளில் நீர் மட்டம் குறைவதாகவும் அனர்த்தம் ஏற்படப் போவதாகவும் மக்கள் பதட்டம் அடைந்துள்ளதுள்ளனர்

கலவரம் அடைந்த மக்கள் வீதிகளில் குழுமியுள்ளனர் இது வதந்தி எனவும் மக்கள் கலவரம் அடைய வேண்டாம் எனவும் கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அத்துடன் களுதாவளை , களுவாஞ்சிக்குடி , கல்லாறு உட்பட்ட சில பகுதிகளில் கிணறு வற்றுவதால் ஆபத்து ஏற்படும் நிலைமை இல்லையென வளிமண்டலவியல் அதிகாரிகளும் , இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் சற்றுமுன் கொழும்பில் தெரிவித்தனர்.

வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஷானிக்கா திசாநாயக்க மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி பிரதீப் கொடிப்பிலி ஆகியோரிடம் இதுபற்றி அளித்த விளக்கம் வருமாறு ,

“ இது சாதாரண காலநிலை மாற்றத்தால் வருவதாக நாங்கள் கருதுகிறோம். பூமியதிர்ச்சி எங்கும் ஏற்படவில்லை. கடலும் உள்வாங்கவில்லை .அதனால் சுனாமி ஆபத்தும் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் கூடுதலான தண்ணீர் வந்து கிணறுகள் நிறைந்தன என்றும் கேள்விப்பட்டோம். எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை” என்று தெரிவித்துள்ளனர்

Be the first to comment

Leave a Reply