கச்சேரியில் இரகசிய அறையா…!

நேற்றுமதியம் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் மேல்மாடியில் உள்ள அலுவலக அறை ஒன்று உட்பக்கமாக தாளிடப்பட்டிருந்ததை அங்கு பணியாற்றிய ஏனைய உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளனர்.

குறித்த அறையினுள் பயிலுனராக செயல்படும் இளம் யுவதி ஒருவர் இருக்கையில் அதிகாரி ஒருவர் அங்கு சென்று அறையின் கதவை அடிக்கடி தாளிடுவதை சக உத்தியோகத்தர்கள் அவதானித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்றையதினமும் அதுபோல இடம்பெற உடனடியாக குறித்த விடயத்தினை மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

இதனையடுத்து உள்ளக கணக்காய்வு அதிகாரி அந்த அறைக்கு சென்றபோது கதவு தாளிடப்படிருந்ததை அவதானித்த நிலையில் கதவினை தட்டி

அந்த யுவதியை மாவட்ட செயலாளரிடம் அழைத்து சென்ற விசாரணை நடத்தப்பட்ட நிலையில் குறித்த யுவதி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை காதலர் தினத்தன்று மாவட்டசெயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு பணியாற்றும் இளம் யுவதிகளின் வீடுகளிற்கு சென்று பூ வழங்கியதாக மாவட்ட செயலாளரிடம் முறைப்பாடு செய்ததாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply