வரும் நாட்களில் திருமணம் செய்யப்போகின்றவர்களுக்கு விடப்பட்ட அறிவித்தல்..

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் திருமணம் செய்யவுள்ளவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில் திருமண மண்டபம் அல்லது திருமணம் செய்கின்ற தலங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த சட்டதிட்டங்களை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் டாக்டர் அனில் ஜாசிங்க கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply