சிறுவன் பலியான சோகம்…

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காளபோட்டமடு ஆற்றுப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மேலும் தெரிவித்ததாவது,

முதலைக்குடா பகுதியை சேர்ந்த 19 வயதையுடைய தியாகராஜா கேதீஸ்வரன் எனும் இளைஞன் காளபோட்டமடு ஆற்றுப் பகுதியில் நேற்றைய தினம் (14) ஆடு மேய்க்கச் சென்றிருந்தபோது குறித்த ஆற்றுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இறப்பு தொடர்பான விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply