தாயின் கையை கடித்த மகன்… அதிர்ச்சி சம்பவம்..

அதிக மதுபோதையில் காணப்பட்ட நபர் ஒருவர் மேலும் மதுபானம் அருந்துவதற்காக பணம் கேட்டு தாயின் கையைக் கடித்து தாக்கிய சம்பவம் ஒன்று வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னகோன் கிராமத்தைச் சேர்ந்த 69 வயதுடைய தாயே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் நிகவெரட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தாயைத் தாக்கிய மகன் மதுபோதைக்கு அடிமையாகியிருந்தவர் என்றும், அவரது மனைவி வெளிநாட்டுத் தொழிலுக்குச் சென்றுள்ள நிலையில் தனது மகனின் 14 வயது மகளைப் பார்த்துக் கொள்வதற்காக சந்தேக நபரின் தாய் தனது மகனின் வீட்டுக்கு வந்து தங்கியிருந்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் அதிக மது போதையில் வந்துள்ள மகன் வீட்டின் கதவைத் தாக்கியுள்ளார்.

சப்தம் கேட்டு அவரது தாய் வெளியே வந்தபோது தனது தாயிடம் மதுபானம் வாங்குவதற்கு பணம் கேட்டு தாயின் கையைக் கடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் ,அயலவர்கள் தாயை நிகவெரட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வாரியாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply