சீனாவை பழிவாங்கும் அமெரிக்கா.. நடவடிக்கைகள் ஆரம்பம்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான செனட்டர் லிண்ட்சே கிரஹாம், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை விதிக்கும் சட்டமூலமொன்றினை செனட் சபையில் தாக்கல் செய்துள்ளார்.

தாக்கல் செய்த சட்டமூலத்தில், ‘கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவலுக்கு, சீனாவே காரணம். இது தொடர்பாக அமெரிக்கா நடத்திவரும் விசாரணைக்கு ஒத்துழைத்து, வைரஸ் குறித்த முழு தகவல்களை அளிக்க, சீனாவுக்கு நெருக்கடி தர வேண்டும்.

மனித குலத்துக்கு ஆபத்தாக செயற்பட்டுவரும், சீனாவில் உள்ள வனவிலங்குகள் சந்தையை மூட வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை விதிக்க ட்ரம்ப்புக்கு அதிகாரம் உண்டு’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை சீனா மீறும் பட்சத்தில், சொத்து முடக்கம், பயணத் தடைகள் மற்றும் விசா இரத்து செய்தல், அத்துடன் அமெரிக்க நிறுவனங்களால் சீன வணிகங்களுக்கான கடன்களுக்கான கட்டுப்பாடுகள் போன்றவற்றை அமெரிக்க விதிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை எட்டு குடியரசுக் கட்சி செனட்டர்கள் வழி மொழிந்துள்ளனர்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், ‘இந்த ஒழுக்கக்கேடான சட்டமூலத்தை சீனா உறுதியாக எதிர்க்கிறது மற்றும் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து வெளிப்படையாகவும் உள்ளது’ என கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply