யாழ்ப்பாணம் வைத்தியர் ஒருவரின் ஆதங்கப்பதிவு…

ஆதங்கம்

காலை கோவில் வீதியில் இரு போலிசார் மறித்தார்கள்.

Tax இருக்கா எனக் கேட்டார்கள். மே 31 வரை Tax புதுப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை அந்த அப்பாவி பொலிசாருக்கு விளங்கப்படுத்த வேண்டி இருந்தது. அப்படி இருந்தும் அவர்களுக்கு என்ன பணக்கஷ்டமோ தலையைச் சொறிந்தபடி நின்றார்கள் .

மாணிக்கம் மாதிரி நின்றபடியால் தான் மினக்கெடுகுது என்று பாட்சா மாதிரி மறுபக்கத்தை காட்டியதும் விட்டு விட்டார்கள்.

ஆவணங்களை சோதிப்பது நல்லது. அவர்களின் கடமையும் கூட. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

ஆனால் எனது ஆதங்கம் இது தான். பத்து மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் கும்பலாக வரும் ரவுடிகள் ஏனோ இவர்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை.

சில வேளைகளில் காதில் கடுக்கனுடன், பரட்டை தலையுடன், வாயில் வெற்றிலை சாறு வழிய, கண்களில் வக்கிரமும், கஞ்சா போதையும் தெரிய வேகமாக வருபவர்கள் நல்லவர்கள் என்று நம்பி ஏமாறுகிறார்களோ தெரியவில்லை.

Be the first to comment

Leave a Reply