மட்டக்களப்பில் விபத்தில் ஊடகவியலாளர் பலி…

மட்டக்களப்பில் கோரவிபத்து ஊடகவியலாளர் பலி!

மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதி பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது

திருகோணமலை இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கல்முனைக்கு சென்று கொண்டிருந்தனர்

இதன்போது மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளாதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Be the first to comment

Leave a Reply