வற்றாப்பளை ஆலயத்தில் இம்முறை பொங்கல் தடை…

இலங்கை வடக்கே வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவில் பொதுமக்களை அனுமதிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – வற்றாப்பளை ஆலய வருடாந்த பொங்கல் விழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (13) நடைபெற்றது.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன், கரைத்துறைப்பற்று பிரதேச சபை செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர், ஆலய பரிபாலன சபையினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் பிரகாரம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக வற்றாப்பளை ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply