மீண்டும் சீனாவில் கொரோனா;முடக்கப்பட்ட நகரம்..!

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் சீனாவில் ஏற்படும் அபாயம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

40 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சீனாவின் வடமேற்கு நகரமான ஜிலினில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த நகரம் பகுதியளவில் மூடப்பட்டது.

போக்குவரத்து மற்றும் பள்ளிகள் முடக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனா இரண்டாவது அலை பதற்றம் அங்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நகரத்திலிருந்து வெளியேற விரும்புவோருக்கு கோவிட்-19 டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்தால்தான் வெளியேற அனுமதி வழங்கப்படுகிறது.

வைரஸ் குறித்து அலட்சியம் காட்ட வேண்டாம் இரண்டாம் அலை ஆபத்து இருப்பதாக சீன அதிபரே சமீபத்தில் எச்சரித்திருந்தார்.

வூஹானில் சமீபத்தில் புதிய கரோனா தொற்றுக்கள் ஏற்பட்டதையடுத்து 1 கோடியே 10 லட்சம் மக்களையும் டெஸ்ட் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply