ஒட்டுமொத்த தனிமைப்படுத்தலில் தமிழ்த்தேசிய முன்னணியினர்..

பொலிஸ் மற்றும் இராணுவத்தின் எதிர்ப்பையும் மீறி செம்மணியில் நடைபெற்ற நினைவேந்தலில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

இன்று (13) காலை குறித்த நினைவேந்தலை நடத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். 

எனினும், அவர்களின் எதிர்ப்பை மீறி சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு நினைவேந்தல் இடம்பெற்றது. 

இந்நிலையிலேயே குறித்த நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களின் பதிவுகளை பெற்ற பொலிஸார் அவர்களை தனிமைப்படுத்தப்படவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply