முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முதல்நாள் நிகழ்வு- செம்மணியில், இராணுவம் தடை, மீறி நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவேந்தல் இன்று (13) காலை யாழ். செம்மணிப் பகுதியில் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் நிகழ்வை தடுத்தபோதும் எதிர்ப்பை மீறி நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டு தோறும் இடம்பெற்று வருகிறது.

இதன்படி இந்த ஆண்டும் செம்மணி படுகொலை நினைவிடத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிகழ்வை நிறுத்தி, அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு பணித்துள்ளனர்.

எனினும், சமூக இடைவெளியைப் பேணியே நிகழ்வு நடத்தப்பவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது எனக் கூறியபோதும் பொலிஸார் விடாப்பிடியாக வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

எனினும், அதையும் மீறி சமூக இடைவெளியைப் பேணி நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது.

Be the first to comment

Leave a Reply