பிரதமருடன் இணைகிறாரா சுமந்திரன்..? சந்திப்பு கூறுவது என்ன..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்த ஊடக அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று 2020-5-12 பிற்பகல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது

கடந்த திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமர் மகிந்த, சுமந்திரனிடம் கேட்டறிந்தார். அத்துடன், முழுமையான விபரங்களை தம்மிடம் சமர்ப்பிக்கும்படிக்கும் கேட்டிருந்தார்.
இதனடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் முழு விபரங்களும் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணத்தின் பங்களிப்புடன் உறுதி செய்யப்பட்டு, முழுமையான அறிக்கை ஒன்றை சுமந்திரன் இன்று பிரதமரிடம் கையளித்தார்.

இந்தக் கைதிகளில் வழக்குகள் முடிவுக்கு வந்தவர்கள் தொடர்பில், தாம் ஜனாதிபதியுடன் பேசுகிறார் எனவும், சுமந்திரனையும் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறும் கேட்டுக்கொண்ட பிரதமர், இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்கிறார் எனவும் உறுதியளித்தார்.

அதேவேளை, புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் சுமந்திரனோடு கலந்துரையாடிய பிரதமர், தாம் புதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்கவுள்ளார் எனவும் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதியும் இதனை உறுதி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

புதிய நாடாளுமன்றம் கூடுகின்றபோது இது தொடர்பிலான நடவடிக்கைகளைத் தாம் ஆரம்பிக்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இந்த முயற்சிகளுக்கு அத்தியாவசியமாகும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இடம்பெறுகின்றபோது அத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என தெரிவித்த சுமந்திரன், நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இக்கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கிறார் என பிரதமர் உறுதியளித்தார். என்றுள்ளது

தேர்தலுக்கான தூசு தட்டல் என மக்கள் கவலை வெளியிட்டதை காணக்கூடியதாக இருந்தது.

Be the first to comment

Leave a Reply