சுமந்திரனே எமது தலைவர் , எதிராக பேசியவர்களுக்கு நடவடிக்கை.. தமிழரசுக்கட்சி செயலாளர்..

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்திற்கு வடக்கு – கிழக்கு முழுமையாக கடுமையான எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில் சுமந்திரனின் ஆதரவாளர்கள் கருத்து வெளியிடாது தலைமறைவாகியுள்ளனர்.

இந்தச் சூழலில் சுமந்திரனுக்கு எதிராக கருத்து வெளியிட்டவர்கள் தொடர்பில் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சுமந்திரனின் அறிக்கை வெளியான பின்னர் பலமுறை சுமந்திரன் கூறுவதில் தவறில்லை என தொடர்பு கொண்ட பின் கருத்து தெரிவித்திருந்தார், சுமந்திரன் கூறியதில் தவறில்லை என்றும், விடுதலைப்புலிகள் என்ன யோக்கியமானவர்களா என ஆதரவாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று வரை கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சுமந்திரன் விடுதலைப்புலிகள் தொடர்பில் கூறிய கருத்து அனைத்து தமிழ்மக்களையும் புண்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் எந்த ஒரு கருத்தையும் கூறாது, சுமந்திரனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிராக பொதுச்செயலாளர் கூறிய கருத்து, நாற்பத்தையாயிரம் மாவிரர்களையும் இழந்து நிற்கும் எமது இனத்திற்கு பெரும் கவலையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.

பொதுச்செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசிங்கம் சட்டநடவடிக்கை எடுக்க தகவல் அறிந்த சுமந்திரனுக்கு எதிராக கருத்து வெளியிட்டவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் எமது தலைவர் சுமந்திரன் எனவே அவரை மீறி யாரும் எதுவும் செய்து விட முடியாது என கருத்து வெளியிட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply