இலங்கையிலிருந்து பயணிகள் விமான சேவை நாளை ஆரம்பம்..

இலங்கை விமான சேவை நாளை முதல் லண்டன், டோக்கியோ, மெல்பேர்ன் மற்றும் ஹொங்காங் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பரவிய கொரோனா வைரஸ் அச்சநிலை காரணமாக நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், தற்போது நாட்டில் நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நாளை முதல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நிறுவன செயற்பாடுகள் வழமைக்கு கொண்டு வரப்பட்டாலும் இன்னும் முற்றுமுழுதாக கொரோனா வைரஸ் அச்சம் நீங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது சேவையை குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கிடையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply