அரச தனியார் பேரூந்துகள், ரயில்களில் நாளை முதல் பயணிக்கலாம்..

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் நாளை முதல் அரச, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் நேற்றிலிருந்து அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply