பிரதமரை இன்று சந்திக்கின்றார் சுமந்திரன்..உள்நோக்கம் கொண்டதா..?

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சுமந்திரன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அரசியல் கைதிகளின் விபரம் ஒப்படைப்பிற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக நடந்த சந்திப்பில் அரசியல் கைதிகளின் விடுதலைதொடர்பில் பேசப்பட்டதாக கூறப்பட்டது.

அதன்போது பிரதமர் விபரங்களை கேட்டதாகவும் அவற்றை ஒப்படைப்பதற்கு இவ் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று 2020-5-11 நேரம் கேட்கப்பட்டிருந்த போதும் அது இன்று 2020-5-12 மாலை 7 மணிக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது.

இதேவேளை மற்றும் சில கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அதில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் காலங்கள் நெருங்கும் போது

அரசியல் கைதிகள் விடுதலை

சர்வதேச குற்றவியல் விசாரணை

காணி விடுவிப்பு

போன்ற பழைய கோப்பு (file) களை தூசு தட்டுவது கூட்டமைப்பின் பாணி என மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply