குறைந்த, மத்திய மற்றும் உயர் தர வருமானம் பெறுவோருக்காக வீடுகளை நிர்மாணிக்கும் பணியும் ஆரம்பிக்கப்படவுள்ளது- ஜனாதிபதி

ஜனாதிபதியின் 2020-05-11 கலந்துரையாடலின் பிரகாரம் சமூக வலைத்தள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன..

கொழும்பு நகரம் உள்ளிட்ட பிரதான நகரங்களை மையப்படுத்தி விரைவான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது,

இது தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று – அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிறுவனங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டுச் சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் ஜனாதிபதி செலகத்தில் இடம்பெற்றது.

இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வந்து பொருளாதாரச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் – ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்தல்

வெளிநாட்டு கடன் பெறாமல் முதலீடுகளினால் மட்டும் புதிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் சுதேச கொள்கைக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களின் அபிவிருத்தியை விரைவாக ஆரம்பிப்பது

அபிவிருத்தித் திட்டங்களுக்காகக் காணிகளைத் தெரிவுசெய்து கையகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது,

குறைந்த தர, மத்திய தர மற்றும் உயர் தர வருமானம் பெறுவோருக்காக வீடுகளை நிர்மாணிக்கும் பணியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருவோரை இலக்காகக் கொண்டு அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகளை நிர்மாணித்து வாடகை அடிப்படையில் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள – கொழும்பு நகரை அண்மித்த அனைத்து பாரியளவிலான கட்டுமான மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்பு உடையவர்களுடன் கலந்துரையாடி விரைவாக மீண்டும் அவற்றை ஆரம்பித்தல்

கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களை இணைத்து நிர்மாணிக்கப்படவுள்ள வீதி முறைமையின் பணிகளையும் விரைவுபடுத்தவும் இன்று தீர்மானிக்கப்பட்டது

பயன்படுத்தப்படாத காணிகளை இனம்கண்டு, அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள வீதிகளின் இருமருங்குகளிலும் – இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு இசைவான விவசாய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் யோசனையும் இன்று முன்மொழியப்பட்டது.

Be the first to comment

Leave a Reply