வாள்வெட்டில் ஈடுபடும் பிஞ்சில் பழுத்தவைகளிற்கு கோத்தபாய இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்??

வாள் வெட்டுகும்பல்கள் கொரோனாவுக்கு விதிவிலக்கா?

இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட சில மணித்தியாலத்திலேயே பத்து மோட்டார் சைக்கிள்களில் வந்த இருபது வரையான ரவுடிகள் முத்திரைச் சந்தி நல்லூரில் நின்ற இருவரை வாளால் வெட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

பொலிசாரும் ராணுவத்தினரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த எல்லா இடமும் நிற்கும் போதே பிரதான வீதிகளால் எந்த பயமும் இல்லாது வந்து பட்டப் பகலில் இந்தத் தாக்குதவ் நடத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் தேவையற்று வீதிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றது. ஒன்று கூடல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இருபது ரவுடிகள் ஒன்று கூடி வாளுடன் பயணித்து தாக்குதல் மேற்கொள்ளுமளவுக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நிலவரம் இருக்கிறது.

கௌரவ ஜனாதிபதி அவர்கள் நேரடியாக கொரோனா தொடர்பான செயல்பாட்டை வழிநடத்தி வருகின்றார். ஜனாதிபதிக்கே சவால் விடும் வகையில் இந்த ரவுடிகளின் அட்டகாசம் உள்ளது.

கஞ்சா அடித்து எந்த நேரமும் போதையில் மிதக்கும் இவர்கள் மூலம் கொரோனா பரவாதா?

இவர்கள் கைது செய்யப்படாவிட்டால் இது கொரோனாவை கட்டுப்படுத்தும் உயர் தரப்புகளுக்கே அவமானம். உயர்மட்டங்களின் பார்வைக்கு செல்லும் வரை இதை அதிகமாகப் பகிருங்கள்.

Be the first to comment

Leave a Reply