பழைய கல்வி முறையில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படாது..அமைச்சர் பந்துல

எதிர்வரும் 11 ஆம் திகதி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால் கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு பிரிவினரை மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவர்களுக்கு இடையிலான சமூக இடைவெளியை பேணுவதற்கு முடியாததால் எந்தவொரு காரணத்திற்காகவும் பழைய முறையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எண்ணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் இணையத்தின் மூலம் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த செயற்பாடுகள் குறித்து நாளைய தினத்தில் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைகழக உபவேந்தர்களிடம் கேட்டறியவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply