இரண்டு வாரங்களுக்கு மக்களுக்கு பொது போக்குவரத்து தடை..

இன்னும் இரண்டு வாரங்களுக்கு பொது போக்குவரத்தை அவசியமற்ற தேவைகளுக்கு மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று போக்குவரத்து அமைச்சகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கே வழங்கியதாக அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.

நாளை 11 மே முதல் பொதுப் போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சக பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையை போக்குவரத்து அமைச்சகம் கோரியிருந்தது.

எவ்வாறாயினும், அத்தியாவசியமற்ற பணிகளுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்த பொதுமக்கள் முயற்சி செய்யலாம் என்று டாக்டர் அனில் ஜசிங்க குறிப்பிட்டார், இதன் விளைவாக பொது போக்குவரத்தை இன்னும் இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply