பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் கூட்டங்கூட தடை…

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் கூட்டங்கள், கண்காட்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட எந்தப் பொது நிகழ்வுகளும் நடத்தப்படக்கூடாது என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது கடைப்பிடிக்கப்படவேண்டிய முறைமை குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள வழிகாட்டல் கையேட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது,

குறிப்பிடப்பட்டுள்ள சமூக இடைவெளி, சுகாதாரப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே தவிர்க்கமுடியாத கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடசாலைகளிலும் நுழை வாயிலில் ஒரு பரிசோதகர் இருக்க வேண்டும்.

சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் உள்ள ஒருவர் கண்டறியப்பட்டால், அந்த நபர் வீட்டிற்கு அல்லது சுகாதார மருத்துவ அதிகாரிக்கு திருப்பி அனுப்பப்படுவார்.

பெற்றோர்கள் பாடசாலை வாசல்களில் கூடியிருக்கக்கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைக்குள் நுழைவது முதல் வீடு திரும்பும் வரை அனைவரும் முகமூடி அணிய வேண்டும்.

பாடசாலை நுழைவாயிலில் கை கழுவுவதற்கான வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

பாடசாலை நேரத்திற்கு முன்பே கட்டிடங்கள், வகுப்பறைகள், படிக்கட்டுகளை தினமும் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

வாயில் கதவுகளை முடிந்தவரை திறந்து வைத்திருப்பது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கைகளுக்கும் கதவுகளுக்குமான தெடுகையைக் குறைக்க உதவும்.

இதன்மூலம் ஓரளவு பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

Be the first to comment

Leave a Reply