ஜீலை 11ம் திகதி தேர்தல்..

ஜூலை 11 தேர்தல்- மே 12 அறிவிப்பு
பாராளுமன்றத்தை தேர்தல் ஜூன் 20ஆம் திகதியன்று நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு காலஅவகாசம் போதாமையால், தேர்தல் மீண்டுமொரு தடவை ஒத்திவைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.

கட்சி செயலாளர்கள், சுயேட்சைக்குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன், எதிர்வரும் 12ஆம் திகதியன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ஜூலை 11 ஆம் திகதியன்று தேர்தல் நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறியமுடிகின்றது

Be the first to comment

Leave a Reply