மக்களை வீடுகளிற்குள் முடக்கிவிட்டு யாழில் மின்வெட்டு: மக்கள் பெரும் அதிருப்தி;விபரம் உள்ளே..

மக்களை வீடுகளிற்குள் முடக்கிவிட்டு யாழில் மின்வெட்டு: மக்கள் பெரும் அதிருப்தி; இன்று 9/5/2020 வெட்டப்படும் இடங்களின் விபரம்!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளிற்காக இன்று (9) சனிக்கிழமையும் யாழின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அப்போதும் பராமரிப்பு பணியென கூறப்பட்டது.

கடந்த சனிக்கிழமையும், 9/5/2020 சனிக்கிழமையும் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதி. கொரொனாவை கட்டுப்படுத்த மக்கள் வீடுகளிற்குள் தங்கியிருக்க வேண்டும் என அரசு அறிவித்து வரும் நிலையில், மின் துண்டிப்பு நடைபெறுகிறது.

வீடுகளிற்குள் முடங்கியிருக்கும் மக்களிற்கு மின்சாரம் மிக அவசியமான தேவைகளில் ஒன்று. மக்களை வீடுகளிற்குள் முடக்கி வைத்திருக்க, அரசுக்கும் மின்சாரம் தேவை. ஆனால் இரண்டு தரப்பு பார்வையிலும் இந்த விவகாரத்தை நோக்காமல், யாழில் அடுத்தடுத்த சனிக்கிழமைகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுகிறது.

இது மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒரு புறம் முடுக்கி விடப்படுகிறது. அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கு ஆதரவாக செயற்பட வேண்டியது அவசியம். மக்களை வீடுகளிற்குள் தங்க வைப்பதற்கு எதை செய்ய முடியுமோ, அதை அரச நிறுவனங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

ஆனால், யாழில் அமுல்ப்படுத்தப்படும் மின்வெட்டு அந்த வகையானது அல்ல. அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது உண்மைதான்.ஆனால், இரண்டு நாட்கள் பகல் பொழுது முழுவதும் மின் துண்டிப்பை மேற்கொண்டு, சாதாரண காலத்தில் மின்சாரசபை மேற்கொள்ளும் பராமரிப்பு பணிக்கு இது உகந்த தருமணமல்ல.

யாழில் அமுல்ப்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து தொடர்புடைய அதிகாரிகள், அரச அதிபர், வடக்கு ஆளுனர் கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

காலை 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் இடங்கள்-

யாழ் பிரதேசத்தில் கைதடி , நுணாவில் , மட்டுவில் வாகையடி , நாவற்குழி , கோவிலாக்கண்டி , தச்சந்தோப் , பு மறவன்புலவு , அறுகுவெளி , தனங்கிளப்பு , வெற்றிலைக்கேணி , பூதர்மடம் , கோப்பாய் – மானிப்பாய் வீதி , கோப்பாய் – கைதடி வீதி , கோப்பாய் பருத்தித்துறை வீதி , கோப்பாய் , கல்வியங்காடு , கல்வியங்காடு பாற்சாலை , கட்டைப்பிராய் , இருபாலை , வசந்தபுரம் , கிளுவானை , ஜிபிஎஸ் வீதி , இராமலிங்கம் சந்தி , ஆடியபாதம் நல்லூர் வீதி , கிளிக்கடை , ஆடியபாதம் வீதி , இராமலிங்கம் ஆடியபாதம் சந்தி , கோவில் வீதி – சங்கிலியன் வீதி சந்தி , நல்லூர் பிரதேசம் , கச்சேரி நல்லூர் வீதி , நாயன்மார்கட்டு பிரதேசம் , நாவலர் வீதி கனகரட்ணம் சந்தியிலிருந்து நல்லூர் செட்டி வீதி வரை , பாரதி வீதி , புறுடி வீதி , நொத்தாரிஸ் லேன் , நல்லூர் குறுக்கு வீதி , கண்டி வீதியில் கச்சேரியிலிருந்து கண்டிவீதி செம்மணி வரை , இலந்தைக்குளம் , புங்கன்குளம் , முல்லை , பூம்பகார் , நாவலடி , அரியாலை கிழக்கு , செல்லர் வீதி , மாகியப்பிட்டி , அளவெட்டி , சண்டிலிப்பாய் வடக்கு , பனை அபிவிருத்தி சபை , சங்கன் தனியார் கட்டடம் , சித்த ஆயுர்வேத பல்கலைகழகம் , நாராயனா சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை , யுனைட்டெட் மோட்டார்ஸ் பல்தேசிய கம்பனி , வடக்கு பிரதம செயலாளர் செயலகம் , யாழ் மாநகரசபை அலுவலகம் , வடக்கு கல்வியமைச்சு அலுவலகம் , கார்ட்டன் ஸ்போர்ட் நெட்வேர்க் , அரியாலை டீசல் அண்ட் என்ஜியினரிங் , பிஎல்சி , எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமம் , லிங்க் ரெடி மில்ஸ் பிரைவேட் லிமிட்ரெட் , பல்கலைகழக வணிகப்பிரிவு ஆகிய பகுதிகளில் மின்வெட்டப்படும்

Be the first to comment

Leave a Reply