5000 ரூபாவில் 3000 ஐ ஏப்பம் விட்ட கிராம அலுவலர்..

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உள்ள மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராமங்களில் உள்ள கிராம அலுவலரே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோருக்கான நிதியாக வழங்கப்பட்ட 5000 ரூபா நிவாரணத்தில் 2000 ரூபாவை மட்டும் வழங்கி மீதி 3000 ரூபாவை மோசடி செய்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து ஒரு சிலருக்கு அவர் கொண்டு சென்று வழங்கியுள்ளதாகவும் மீதி பேருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply