வெள்ளைமாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி!!!!.. அமெரிக்க அதிபர் அதிர்ச்சி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடும்ப (வேலட்) அந்தரங்க உதவியாளரும் வெள்ளை மாளிகை ஊழியருமான கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க ஜனாதிபதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமென அச்சம் எழுந்துள்ளதையடுத்து.

அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேலட் என்றவர் அமெரிக்கா இராணுவப்பிரிவில் பணியாற்றி வருபவர்.

வெள்ளை மாளிகைக்காக உருவாக்கப்பட்டதுடன் அமெரிக்க ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரத்தியேகமானவர்கள் என்பதுடன் டிரம்ப் உள்நாட்டு பயணம் செய்தாலும் வெளிநாட்டு பயணம் செய்தாலும் ஜனாதிபதியுடன் செல்பவர்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என மருத்துவர்களின் முடிவுகள் வெளியாயின.

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக ஊழியரும், அதிபர் டிரம்ப் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்துவரும் வேலட் எனப்படும் அந்தரங்க உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது வெள்ளை மாளிகை மட்டுமின்றி டிரம்ப்பையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் டிரம்ப்பின் வேலட்டிற்கு தொற்று உறுதியானதால், இப்போது டிரம்ப்பையும் பரிசோதனை செய்ய வேண்டும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Be the first to comment

Leave a Reply