ஜனாதிபதி, பிரதமர், மற்றும் அமைச்சரவையின் சம்பளம் கொரோணா நிதிக்கு வழங்கப்படுமா??

அரச ஊழியர்களின் சம்பளத்தில் அரைவாசியினை தொற்று நோய் தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் அதே நேரம் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் அமைச்சரவை அமைச்சர்களின் சம்பளங்களை இன்னும் அவர்கள் வழங்காதிருப்பது ஏன் என்றும் இது நியாயமற்ற செயல் என்றும் எக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை 5000 கொடுப்பனவின் இரண்டாம் கட்டம் வழங்கப்படுகின்ற போதும் அது இன்னும் நுவரெலியா பகுதி மக்களுக்கு முதல் கட்டம் கூட வழங்கப்படவில்லை, இது அவர்களுக்கு செய்யும் அநியாயம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்குறிப்பிடப்பட்டவற்றை தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply