சலூன்களில் எவற்றையெல்லாம் வெட்டலாம்….

உள்ளூர் சிகை அலங்கரிப்பு மற்றும் அழகு நிலையங்களை திறப்பது தொடர்பில் சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிகை அலங்கார மற்றும் அழகு நிலைய உரிமையாளர்கள் தமது நிலையங்களை மீண்டும் இயக்க விரும்பினால் அதற்கான கோரிக்கை கடிதங்களை தமது பகுதி சுகாதார மருத்துவ அதிகாரிகளிடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை தாடி மீசை தவிர்த்து முடியலங்காரம் மட்டுமே செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாய் மூக்கு என்பவற்றின் தொடுகையை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடுமையான சுகாதார விதிகளை பின்பற்றுமாறு உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply