விமான பயணச்சீட்டு பெறுமதியில் பெரும் மாற்றம் வருமா?…

உலக முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்குவந்த பின்னர், விமானப் பயணக் கட்டணம் கட்டாயம் குறையும் என சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், அதன்பின்னர் குறைந்தது 50 சதவீதம் விமானப் பயணக் கட்டணம் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஊரடங்கு காரணமாக இயக்காமல் வைத்துள்ள தங்கள் விமானங்களை மீண்டும் பறக்கவிட வேண்டும் என விமான போக்குவரத்து நிறுவனங்கள் மிகவும் ஆவலாக இருப்பதால், விமானப் பயணம் தொடங்கும் பொழுது தேவைக்கு அதிகமான அளவில் விமானங்கள் இயக்கப்படும்.

எவ்வாறாயினும் விமான பயணங்கள் மேற்கொள்வோர் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதால் அந்த அழுத்தத்தின் காரணமாக விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாத ஆரம்பத்திலேயே அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.

மேலும் இதனால் ஏராளமான விமான சேவை நிறுவனங்கள், வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் ஆட்குறைப்பை மேற்கொண்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply