இராஜினாமா செய்யத்தயார்- மகிந்த தேசப்பிரிய

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தற்போதைய அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் எந்த இரசிய ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் மஹிந்த தேஷப்பிரியவின் மகன் விதுர காஷியப்ப தேஷப்பிரிய வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதற்கு பின்னால் அரச அனுசரணை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் அதனை மறுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர், அப்படி செய்திருந்தால் பதவியை இராஜினாமா செய்யவும் தயார் என்றும் கூறியுள்ளார்

இலங்கையில் மீதமுள்ள சுற்றுலா பிரஜைகள் எத்தனை பேர் தெரியுமா?

இலங்கையில் 4 மே 2020 வரையான காலப்பகுதிவரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 11,389 பேர் மீதமுள்ளதாக இலங்கை சுற்றுலா திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 12 ம் திகதி உலக பெரும் தொற்றாக உலக சுகாதார் அமைப்பு பிரகடனப்படுத்தும் போது சுமார் 76000 சுற்றுலாப்பிரயாணிகள் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.